5 மாத பெண் குழந்தை திடீர் சாவு
அஞ்செட்டியில் 5 மாத பெண் குழந்தை திடீரென இறந்தது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு மோனிசா என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் குழந்தைக்கு திடீரென உடல்நிலம் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெற்றோர் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.