ரெயிலில் இருந்து தவறி விழுந்து பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் சாவு

ரெயிலில் இருந்து தவறி விழுந்து பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் இறந்தார்.

Update: 2022-06-19 17:00 GMT

தர்மபுரி:

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெச்சல்லா ஆனி மரி (வயது35). இவர் தனது நண்பர் ஹரிஷ் என்பவருடன் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் விரைவு ரெயிலில் சென்றார். இந்த ரெயில் தர்மபுரியை கடந்து சேலம் மாவட்டம் காருவள்ளி சின்னதிருப்பதி அருகே பெரும்பள்ளம் பகுதியில் சென்றபோது ரெயிலின் கதவை அந்த பெண் திறந்துள்ளார். அப்போது கதவு வேகமாக திறந்ததால் ரெச்சல்லா ஆனி மரி நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரெச்சல்லா ஆனி மரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்