போச்சம்பள்ளி அருகே வட மாநில லாரி டிரைவர் திடீர் சாவு

போச்சம்பள்ளி அருகே வட மாநில லாரி டிரைவர் திடீரென இறந்தார்.

Update: 2022-06-19 16:29 GMT

மத்தூர்:

உத்தரபிரதேச மாநிலம் பேராலியை சேர்ந்தவர் மனோஜ் சிங் (வயது 40). லாரி டிரைவர். கடந்த 17-ந் தேதி கன்டெய்னர் லாரியை ஓட்டி கொண்டு, போச்சம்பள்ளி அருகே உள்ள போக்கம்பட்டி பக்கமாக வந்தார். அங்கு லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்த மனோஜ்சிங் திடீரென்று இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்