ஓசூர் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி

ஓசூர் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பெண்

Update: 2022-06-17 16:20 GMT

ஓசூர், ஜூன்.18-

ஓசூர் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

பெண்

பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்தவர் லீலாவதி (வயது 55). இவர் ஸ்கூட்டரில் ஓசூர் தர்கா முத்து மாரியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட லீலாவதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

வடமாநில தொழிலாளி

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் போலா சவுகான் (18). இவர் சூளகிரி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் மோட்டார்சைக்கிளில் கடந்த 12-ந் தேதி பிள்ளைகொத்தூர் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள்கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த போலா சவுகானை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

சூளகிரி அருகே உள்ள பெப்பாலப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (53). இவர் மொபட்டில் சூளகிரியில் தியாகரசனப்பள்ளி சாலையில் ஆஞ்சநேயர் கோவில் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்