கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் இறப்பு
கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் இறந்தது.;
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள கொங்கம்பட்டி கிராமத்தில் அதிகாலை நேரத்தில் குடி தண்ணீர் தேடி மான் வயல்வெளிகளில் அலைந்து திரிந்து உள்ளது. ஆட்கள் நடமாட்டம் கண்டு அஞ்சி தப்பி ஓடிய மான் கம்பி வேலியில் சிக்கி படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தது. இதை கண்ட கிராம மக்கள் சிவகங்கை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சிவகங்கை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த மானை மீட்டு எடுத்துச் சென்றனர். அரியாண்டிபுரம் கண்மாய்க்குள் 5-க்கும் மேற்பட்ட மான்கள் இருப்பதாக ஆடு மேய்ப்பவர்கள் கூறுகின்றனர்.வனத்துறையினர் மான்களை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்கம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.