பனை மரத்திலிருந்து விழுந்தவர் சாவு

பனை மரத்திலிருந்து விழுந்தவர் உயிரிழந்தார்.

Update: 2022-06-14 17:03 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா கொடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லூயிஸ் யாக்கோபு. இவர் சம்பவத்தன்று அந்த கிராமத்தில் பனை மரத்தில் ஏறி பாலை சீவி கொண்டிருந்தாராம். அப்போது நிலை தடுமாறிய நிலையில் கீழே விழுந்த லூயிஸ் யாக்கோபு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அருள் ரீட்டா கொடுத்த புகாரின் பேரில் திருவாடானைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்