சூளகிரி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி நண்பர் படுகாயம்

சூளகிரி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். இவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-06-12 16:14 GMT

சூளகிரி:

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா இடையம்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 22). ஓமலூர் தாலுகா மாட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (21). நண்பர்களான இவர்கள் 2 பேரும் வேலை விஷயமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் மேலுமலை அருகே சென்ற போது, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்