அஞ்செட்டி அருகே மரம் முறிந்து விழுந்து வாலிபர் சாவு

அஞ்செட்டி அருகே மரம் முறிந்து விழுந்து வாலிபர் இறந்தார்.

Update: 2022-06-09 17:23 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹனிப் பாய். மர வியாபாரி. இவர் அஞ்செட்டி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் தொழிலாளர்களுடன் சென்று மரங்களை வெட்டிக்கொண்டு இருந்தார். இவர்களுடன் இஸ்லாம்பூரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஹரிஷ் (வயது26) என்பவரும் உடன் சென்றார். தொழிலாளர்கள் மரத்தை வெட்டியபோது திடீரென மரம் முறிந்து அருகில் நின்றிருந்த ஹரிஷ் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்