மதுபோதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தவர் சாவு
கொண்டலாம்பட்டி பகுதியில் மதுபோதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தவர் இறந்தார்.;
கொண்டலாம்பட்டி:
ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38), சுமைதூக்கும் தொழிலாளியான இவர், கடந்த 4 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கொண்டலாம்பட்டி பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி சுைம தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த அவர், சிவதாபுரம் பகுதியில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.