அரூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
அரூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.;
அரூர்:
அரூர் அருகே உள்ள கீழ் தைலாபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை. தொழிலாளி. இவர் அந்த பகுதியில் திருமணத்திற்காக பந்தல் அமைத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு இடையூறாக இருந்த மரத்தில் ஏறி கிளைகளை வெட்டியபோது உயர்மின் கம்பியில் விழுது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.