தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பஸ் டிரைவர் சாவு

காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பஸ் டிரைவர் இறந்தார்.

Update: 2022-05-30 15:05 GMT

காவேரிப்பட்டணம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா தேவரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சென்னமூர்த்தி (வயது 38). அரசு பஸ் டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது சென்னமூர்த்தி திடீரென தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்