ஆட்டையாம்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மோதி நெசவு தொழிலாளி சாவு

ஆட்டையாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி நெசவு தொழிலாளி இறந்தார்.;

Update:2023-10-12 02:01 IST

பனமரத்துப்பட்டி

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 61).நெசவு தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் செல்வராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்