கிருஷ்ணகிரி அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.;
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா குருவிநாயனப்பள்ளி அருகே உள்ள மேல் கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 29). டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (43) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மகராஜகடை அருகே குப்பம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரி அருகே கம்மம்பள்ளி பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ், திருப்பதி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
2 பேர் பலி
அவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் இறந்து விட்டனர்
இந்த விபத்து குறித்து செல்வராஜின் சகோதரர் தங்கராஜ் மகராஜகடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.