தடுப்பூசி செலுத்திய பெண் குழந்தை பலிபோலீசார் விசாரணை

தடுப்பூசி செலுத்திய பெண் குழந்தை இறந்தது.

Update: 2023-09-30 19:30 GMT

மத்தூர்:

போச்சம்பள்ளி தாலுகா போக்கம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி மணிமேகலை (வயது 25). இவருக்கு கடந்த 46 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று முன்தினம் காலை குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்