போச்சம்பள்ளி அருகேமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; முதியவர் சாவு
போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில்; முதியவர் இறந்தார்.;
மத்தூர்
போச்சம்பள்ளி அருகே உள்ள மூங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது65). இவர் மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது கல்குமாரம்பட்டியை சேர்ந்த ரிக்கி (19) என்பவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தார். எர்ரம்பட்டி அருகே மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் படு காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். ரிக்கிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.