நண்பர்களுடன் குளித்த போதுமேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

Update: 2023-09-10 19:56 GMT

மேட்டூர்

சேலம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 35). தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று மேட்டூருக்கு வந்தார். நண்பர்கள் அணையின் நீர்த்தேக்க பகுதியான திப்பம்பட்டி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது வேலு ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றபோது தண்ணீரில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் வேலு தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து நண்பர்கள் கருமலை கூடல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய வேலுவின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் போலீசார் வேலுவின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளி தண்ணீரில் மூழ்கி இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்