கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

Update: 2023-09-08 19:45 GMT

மொரப்பூர்

தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை அருகே உள்ள பள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 62). தொழிலாளி. இவர் நேற்று சொந்த வேலையாக கடத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது போசிநாயக்கனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் காளியப்பன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்