கிருஷ்ணகிரியில்லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி டாக்டர் சாவு

Update: 2023-08-29 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி சென்னையை சேர்ந்த டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

லாரி மீது மோதியது

சென்னை வளசரவாக்கம் மதுரை பெருமாள் நகர் ஏகதம்மாள் தெருவை சேர்ந்தவர் லோகன். இவரது மகன் மனோஜ் (வயது 25). இவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 27-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில், கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

சேலம்-ஓசூர் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் பக்கமாக சென்ற போது அந்த வழியாக சென்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டாக்டர் மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்