மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலி

Update: 2023-08-27 19:30 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள சீகலப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாமல்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்