ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் சீனப்பா (வயது 70). விவசாயி. நேற்று முன்தினம் இவர் மொபட்டில பாகலூர்- ஓசூர் சாலையில் தனியார் லேஅவுட் பக்கமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மொபட் மோதியது. இந்த விபத்தில் சீனப்பா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.