தேன்கனிக்கோட்டை,
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அகுபிரஜா அன்சாரி (வயது 23). டிரைவர். இவர் கடந்த 9-ந் தேதி தளி அருகே மதகொண்டப்பள்ளி சாலையில் லாரியை ஓட்டி சென்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி அகுபிரஜா அன்சாரி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.