தர்மபுரி அருகே விபத்தில் வாலிபர் பலி

Update: 2023-08-08 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள மல்லிகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலிக்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த திருமுருகன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்