பர்கூர்
பர்கூர், காவேரிப்பட்டணம் பகுதியில் நடந்த ஜவுளிக்கடை ஊழியர் உள்பட 2 பேர் இறந்தனர்.
ஜவுளிக்கடை ஊழியர்
பர்கூர் அருகே உள்ள பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42) இவர் பெங்களூருவில் ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை மாதேப்பள்ளியில் இருந்து பெங்களூருக்கு மொபட்டில் சென்றார். கந்திகுப்பம் அருகே உள்ள கன்னிமேடு என்ற இடத்தில் சென்றபோது மொபட்டின் முன்பக்க டயர் பஞ்சரானது.
இதில் நிலை தடுமாறிய ரமேஷ் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி
காவேரிப்பட்டணம் அருகே உள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் திம்மாபுரத்தில் இருந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.