ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

Update: 2023-07-31 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 31). தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று பாரதிபுரம் பகுதியில் 66 அடி ரோட்டை ஒட்டி உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்