அரூர்:
அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சித்ரா (வயது 40). அதேபகுதியை சேர்ந்தவர்கள் செல்லி (42), புதூரா(44). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பஸ் நிலைய பகுதியில் கடை கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் சித்ரா சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.