காவேரிப்பட்டணம் அருகே மொபட் மீதுமோட்டார்சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி சாவு2 வாலிபர்கள் படுகாயம்

Update: 2023-07-23 19:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். சேலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

விபத்து

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சுண்ணம்பட்டியை சேர்ந்தவர் அம்மாசி (வயது 60). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மொபட்டில் பையூர் அருகில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கோகுல் (19), விக்னேஷ் (19) ஆகியோர் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

அப்போது மோட்டார்சைக்கிள், மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் அம்மாசி , கோகுல், விக்னேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விசாரணை

இதனிடையே சிகிச்சை பலனின்றி அம்மாசி பரிதாபமாக இறந்தார். கோகுல், விக்னேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து சென்று அம்மாசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்