ரெயில்வே மேம்பால பணியின் போதுபொக்லைன் எந்திரம் மோதி மேற்பார்வையாளர் சாவுஆத்தூர் அருகே பரிதாபம்

ஆத்தூர் அருகே ரெயில்வே மேம்பால பணியின் போது பொக்லைன் எந்திரம் மோதி மேற்பார்வையாளர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-10-11 01:24 IST

ஆத்தூர்

ஆத்தூர் அருகே ரெயில்வே மேம்பால பணியின் போது பொக்லைன் எந்திரம் மோதி மேற்பார்வையாளர் பரிதாபமாக இறந்தார்.

ரெயில்வே மேம்பால பணி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராசிபுரம் செல்லும் வழியில் தில்லைநகர் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் ராசிபுரம் அத்தனூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 26) என்பவர் மணல் சீரமைக்கும் பணியில் மேற்பார்வையாளராக இருந்து வந்தார்.

நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பகுதியை சரிசெய்யும் பணி நடந்து வந்தது. அப்போது மணல் மீது நின்று கொண்டிருந்த ஈஸ்வரமூர்த்தி சறுக்கி தரையில் விழுந்தார். அவர் மீது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரம் ஏறி இறங்கியது. இதில் ஈஸ்வரமூர்த்தி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

இதுபற்றி தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான ஈஸ்வரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொக்லைன் டிரைவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த சக்திவேல் (31) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்