அன்பில், பூவாளூரில் இன்று மின்தடை
அன்பில், பூவாளூரில் இன்று மின்தடை செய்யப்படுகிறது;
திருச்சி, ஜூன்.18-
பூவாளூர் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான மணக்கால் நகர், சாந்திநகர், பூவாளூர், பெருவளநல்லூர், வெள்ளனூர், நன்னிமங்கலம், அன்பில், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், ஜங்கமராஜபுரம், ஆதிகுடி, கொன்னக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.