வாடிப்பட்டி
திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் உசேன் (வயது 25). பழைய இரும்பு வியாபாரி. இவர் நேற்று அதிகாலை 5 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உசேனுக்கு பர்வீனா(20) என்ற மனைவியும், 2 மாத ஆண் கைக்குழந்தையும் உள்ளனர்.