தோட்டத்தில் இறந்து கிடந்த பன்றிகள்
பணகுடி அருகே தோட்டத்தில் பன்றிகள் இறந்து கிடந்தன.
பணகுடி:
பணகுடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் செல்வம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பண்ணை அமைத்து கோழி, பன்றிகள் வளர்த்து வருகின்றார். இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள் சுமார் 10-க்கு மேல் ஆங்காங்கே இறந்து கிடக்கின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கும், கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை பன்றிகள் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய வரவில்லை என்று அந்த பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.