இறந்து கரை ஒதுங்கிய ஆலிவ்ரெட்லி ஆமைகள்
பழையார் கடலோர பகுதியில் ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
கொள்ளிடம்:
பழையார் கடலோர பகுதியில் ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின
சவுக்கு மரத்தோப்புகள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூழையார், கொட்டாய் மேடு, வானகிரி ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் சீர்காழி வனத்துறை சார்பில் மீனவர்களின் நண்பனான கடல் வாழ் உயிரினம் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சு பொரிப்பகம் உள்ளது. கடற்கரையோர பகுதியில் சவுக்கு மரம் தோப்புகள் அதிகமாக காணப்படுகிறது. இப்பகுதியில் எப்போதும் அமைதியான சூழல் நிலவுவதால் ஆமைகள் இப்பகுதியை தேர்வு செய்து டிசம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை கடற் கரை பகுதிக்கு வந்து சவுக்கு தோப்பில் மணலில் குழிகளைத் தோண்டி அங்கு முட்டை இட்டுச் செல்வது வழக்கம்.
3 ஆலிவ் ரெட்லி ஆமைகள்
அங்கு இடப்படும் ஆலிவ் ரெட்லிஆமை முட்டைகளை சேகரித்து ஆமை குஞ்சு பொறிப்பகத்துக்கு கொண்டு சென்று
முட்டைகளை பாதுகாத்து வருகின்றனர். இந்த ஆமை முட்டைகள் 45 லிருந்து 50 நாட்களுக்குள் குஞ்சுகளாக பொறிக்கப்பட்டு அவை கடலில் விடப்படும். . தற்பொழுது கொள்ளிடம் ஆறு பழையார் கடலில் கலக்கும் பகுதியில் வங்கக்கடல் கரையோரம் 3 ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்த நிலையில் காணப்பட்டது. இந்த ஆமைகளை பறவைகள் சாப்பிட்டு எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.
இயற்கை சீற்றம்
இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், கடல் வாழ் உயிரினங்களில் மிக அபூர்வமான உயிரினமாக ஆலிவ் ரெட்லி ஆமை திகழ்ந்து வருகிறது .இந்த ஆமை மீனவர்களின் நண்பனாகவும். கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் இயற்கை பேரிடர்களால் இந்த ஆமை இறந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. தற்போது பழையார் கடலில் 3 ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கிடக்கின்றது. எனவே அரிய வகையான ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறப்பை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர்கள் கூறினர்.