சக்கர குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சக்கர குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.

Update: 2023-05-12 11:06 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் முன்பு உள்ள தேரடி வீதியில் சக்கர குளம் உள்ளது. இதில் பக்தர்கள் யாரும் இறங்காத வகையில் சுற்றி அடைக்கப்பட்டும், குளத்தின் முகப்பு கேட் மூடப்பட்டும் உள்ளது.

இந்த நிலையில் இன்று சக்கர குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதியில் துர்நாற்றம் வீசியது. கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் வெயில் கொளுத்துகிறது.

வெயிலின் தாக்கத்தினால் வெப்பம் தாங்காமல் குளத்தில் இருந்த மீன்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அந்த குளத்தை பார்வையிட்டு செத்து கிடந்த மீன்களை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்