கருப்பாநதி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

கருப்பாநதி அணையில் மீன்கள் செத்து மிதக்கிறது.

Update: 2022-07-02 15:35 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணையில் மீன்வளத்துறை மூலம் மீன்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆண்டு கெண்டை, கட்லா, கெளுத்தி, தேளி உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை போதியளவு பெய்யாததால், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்