வெள்ளாற்றில் இளம்பெண் பிணம்

சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்றில் இளம்பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-09-08 18:58 GMT

சேத்தியாத்தோப்பு

இளம்பெண் பிணம்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி வெள்ளாற்று பாலத்தின் கீழ் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் இதுபற்றி சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெள்ளாற்றில் இறந்து கிடந்த இளம்பெண் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலையா?

விசாரணையில், அந்த பெண் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகள் சூர்யா(வயது 30) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறியவர் வெள்ளாற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அவருடைய தாய் கலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சூர்யா எப்படி இறந்தார் எனவும், அவரை யாரேனும் பலாத்காரம் செய்து கொலை செய்து ஆற்றில் வீசிச் சென்றார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெள்ளாற்றில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்