பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் பிணம்

அருமனை அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண்ணின் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-20 18:45 GMT

அருமனை:

அருமனை அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண்ணின் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியாக வசித்து வந்தார்

அருமனை அருகே உள்ள மாங்கோடு ஓடல்விளை பகுதியைச் சேர்ந்தவர் குருசுமுத்து. இவருடைய மகள் செலினா(வயது 47). செலினாவுக்கும் கேரள மாநிலம் ஆனப்பாறை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆன ஒருசில நாட்களிலேயே செலினா பெற்றோர் வீட்டுக்கு திரும்ப வந்து விட்டார். அதன்பிறகு அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செலினாவின் பெற்றோர் இறந்து விட்டதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும், விளவன்கோடு தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுக்கும் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் சிறிய வருமானத்தை வைத்து வசித்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் அலுவலகங்கள் மூடப்பட்டதால் அதன்பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை.

அழுகிய நிலையில் பிணம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் செலினாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது, செலினா இறந்து உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அருமனை ேபாலீசாருக்கு ெதரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து செலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்