தூக்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிணம்

திருமக்கோட்டையில் தூக்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிணமாக தொங்கினார். இது தொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-26 18:45 GMT

திருமக்கோட்டை:

திருமக்கோட்டையில் தூக்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிணமாக தொங்கினார். இது தொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காளவாய்கரையை சேர்ந்தவர் ரகுபதி(வயது58).ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

தற்போது ரகுபதி திருமக்கோட்டையில் உள்ள எரிவாயு சுழலில் மின் உற்பத்தி நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவர் திருமக்கோட்டை கடைவீதியில் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

குடும்ப பிரச்சினை காரணமாக ரகுபதி மனஉலைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தங்கியிருந்த அறையின் ஜன்னலில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமக்கோட்டை இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி(பொறுப்பு), சப்-இஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் சந்தேகம்

தூக்கில் பிணமாக தொங்கிய ரகுபதியின் கால்கள் தரையில் ஊன்றிய நிலையில் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆன்ரோ ஆரோக்கியராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு வந்த தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

விசாரணை

திருவாரூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் ராக்சி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் ரகுபதி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுதொடர்பான புகாரின் பேரில் திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்