கண்மாயில் வாலிபர் பிணம்
அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் இருந்து பிணம் மீட்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி வாகைக்குளம் கண்மாயில் வாலிபர் உடல் கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ேபாலீசாரின் விசாரணையில் பாளையம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (வயது 35) என்பதும் தெரியவந்தது. இவர் குளிப்பதற்காக கண்மாய்க்கு சென்ற போது நீரில் மூழ்கி உயிர் இழந்தாரா? தவறி விழுந்து இறந்தாரா? யாரேனும் கொலை செய்து கண்மாயில் வீசிச்சென்றனரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.