ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள சின்ன எலசகிரி பசவேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மனைவி சரசம்மா (வயது 45). இவர் கடந்த 22-ந் தேதி காலை அங்குள்ள ஏரிக்கரை அருகில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அவரை விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சரசம்மா திடீரென இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.