ஓசூர்:
ஓசூர் அருகே சின்ன எலசகிரி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 33). பிளம்பர். இவர் ஓசூரில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லால் பஸ் நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென்று பிரேக் அடித்து நின்றதாக கூறப்படுகிறது. அப்போது கணேஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள், நிலைதடுமாறி லாரியின் பின்புறம் மோதியது. இதில் கணேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.