அரூர் அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் சாவு-நண்பர் படுகாயம்

Update: 2023-04-25 18:45 GMT

அரூர்:

அரூர் அடுத்த மாளகப்பாடியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 38). எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான அருண் பாலாஜி (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் எருமியாம்பட்டிக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ஜெகதீசன் ஓட்டி வந்தார். அப்போது அரூர்- சேலம் சாலையில் பே.தாதம்பட்டி பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ஜெகதீசன், அருண் பாலாஜி ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த மற்றொரு கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் ஜெகதீசன் இறந்தார். அருண் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்