ஊத்தங்கரை அருகே அரசு பஸ் மோதி டீக்கடைக்காரர் சாவு

Update: 2023-04-13 18:45 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் டீக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று காலை வண்ணாம்பள்ளி பிரிவு கூட்ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பினார். பின்னர் அங்கிருந்து குன்னத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ், கண்ணன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசபட்ட கண்ணன் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்