ஜேடர்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் எலக்ட்ரீசியன் பலி
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே உள்ள எலந்தகுட்டையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் நேற்று தனது நண்பரான செல்வராஜ் என்பவருடன் சோழசிராமணி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வழியில் எதிரே கோபாலகிருஷ்ணன் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திடீரென இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கோபிநாத் சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வராஜ், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.