காரிமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த கரியன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 37). விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி பிரிவு ரோடு பகுதியில் எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.