பாப்பிரெட்டிப்பட்டி:
திருச்சி மாவட்டம் நாவல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஹிதாயத் அலி (வயது 64). இவர் தர்மபுரி மாவட்ட பொம்மிடியில் ஒப்பந்ததாரர் செந்தில்குமார் என்பவரிடம் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஹிதாயத் அலி பொம்மிடியில் தர்மபுரி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹிதாயத் அலி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.