பாலக்கோடு சர்க்கரை ஆலையில் வெல்லப்பாகு உடலில் கொட்டியதில் தொழிலாளி சாவு

Update: 2023-02-02 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 61). இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி முனியம்மாள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த மாதம் 24-ந் தேதி முனுசாமி சர்க்கரை ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது கொதிக்கும் வெல்லப்பாகு கொட்டியது. இதில் அவர் உடல் வெந்தது. இந்தநிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முனுசாமி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்