அரூரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

Update: 2022-12-08 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே உள்ள சங்கிலிவாடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன் (வயது 57). தொழிலாளி. இவர் அரூர் குரங்குபள்ளம் பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பனை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருப்பன் உயிரிழந்தார். இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்