அதியமான்கோட்டையில் கார் மோதி முதியவர் பலி

Update: 2022-12-06 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டையை சேர்ந்தவர் முனுசாமி (வயது 65). இவர் நேற்று முன்தினம் காலை பால் வாங்குவதற்காக அங்குள்ள கூட்டுறவு பால் சொசைட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம்-தர்மபுரி சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் முனுசாமி மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று அதிகாலை முனுசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்