சூளகிரி:
சூளகிரி தாலுகா ராமாபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி சின்ன வேடியம்மா (வயது 81). சம்பவத்தன்று இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, சின்ன வேடியம்மா மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு வேடியம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.