ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி-நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்

Update: 2022-11-01 18:45 GMT

மத்திகிரி:

ஓசூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் ஏரியில் மூழ்கி பலியானார்.

வாலிபர்

ஓசூர் அருகே மத்திகிரியை அடுத்த எஸ்.முதுகானப்பள்ளியை சேர்ந்தவர் வரதப்பா. இவருடைய மகன் ஆஞ்சப்பா (வயது 21). இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். இவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் என்பதால் சித்தியுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் ஆஞ்சப்பா அருகே உள்ள ஒசா ஏரிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார். அவர்கள் அனைவரும் ஏரியில் ஆனந்தமாக குளித்தனர். அப்போது திடீரென ஆஞ்சப்பா தண்ணீரில் மூழ்கினார். அவரை நண்பர்கள் தேடி பார்த்தனர், ஆனால் கிடைக்கவில்லை.

மூழ்கி பலி

இதுகுறித்து ஓசூர்தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் ஏரியில் மூழ்கிய ஆஞ்சப்பாவை தேடியபோது அவர் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

மத்திகிரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஓசூர் அருகே நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்