அந்தியூரில் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்ட வாலிபர் சாவு

அந்தியூரில் அதிக தூக்கமாத்திரை சாப்பிட்ட வாலிபர் இறந்தார்.

Update: 2022-10-25 21:32 GMT

அந்தியூர்

அந்தியூரில் அதிக தூக்கமாத்திரை சாப்பிட்ட வாலிபர் இறந்தார்.

மயக்க நிலை

அந்தியூர் தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35).

இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதாக தெரிகிறது.

நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் லோகநாதனுக்கு உணவு கொண்டு சென்றார்கள்.

அப்போது அறை கதவை அவர் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ேள சென்று பார்த்தார்கள். அப்போது லோகநாதன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

விசாரணை

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இது குறித்த புகாரின்பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோகநாதன் தற்கொலை செய்து கொள்வதற்காக அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கினாரா? அல்லது தெரியாமல் அதிக மாத்திரைகளை விழுங்கி விட்டாரா? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்